PIS

பனிரெண்டார் இளைஞர் சங்கம்

1967 ஆம் ஆண்டு அக்கரைபாளயத்தில் திரு .A.M.R. பழனிச்சாமி செட்டியார் அவர்களை தலைவராகக் கொண்டு ஆரம்பிக்கபட்டது.

1970 ஆம் ஆண்டு இச்சங்கத்தின் தலைவராக திரு.V.L. வெங்கிடசுப்ரமணியம்  செட்டியார் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 1986 வரை 16 ஆண்டுகள் தலைவராக இருந்து பணியாற்றினார்.

அவரது மறைவிற்கு பிறகு திரு.V.A.ராமலிங்கம் செட்டியார் அவர்கள் 1986 முதல் 2000 ஆம் ஆண்டு வரை 14 ஆண்டுகள் தலைவராக இருந்து பணியாற்றினார்.

 

சங்கத்தின் நோக்கங்கள்:

1. நம் சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவது.

2. நமது சமூக குழந்தைகளின் கல்வி திறனை உயர்த்த எல்லா வழிகளிலும் உதவி செய்வது.

3. குழந்தைகளின் திறமையை வெளி கொணரும் பொருட்டு, ஆண்டு விழாவின் போது பல வகையான போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது.

4. நமது சமூகத்தில் உள்ள உதவி தேவைப்படும் மாணவ,மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது.

5. தேவைப்படுவோருக்கு சங்கத்தின் சார்பில் திருமணம் நடத்தி  வைப்பது.

6. சமூகத்தில் ஆதரவற்ற முதியோருக்கு ஆண்டுதோறும் முதியோர் உதவித்தொகை வழங்குவது.

7. மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கு உதவித் தொகை வழங்குவது.

8. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இறுதி தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெரும் சமூக மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி ஊக்கப்படுத்துதல்.