நமது சமூக வரலாறு
நமது சமூக மக்கள் மற்றும் அனைவரும் அறிந்துகொள்ளும் வண்ணம் நம் சமூக வரலாற்றை வலைதளத்தில் கொனர்வது காலத்தின் அவசியம். அதன் முயற்சியாய் இந்த வரைவு.
இந்த கட்டுரை/தகவல் நமது சங்கத்தின் 4-ம் ஆண்டு மலரிலிருந்து தங்களது பார்வைக்கு கொண்டுவந்துள்ளோம். இந்தத் தருணத்தில், இக்கட்டுரையை அன்று மிகவும் நேர்த்தியாய் வடித்த நமது சமூக பெரியவர்கள் அனைவருக்கும் சிரம் கூப்பி நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
நமது பழமை.
நம் செந்தமிழ் நாட்டுக் காவியங்களில் சிறப்புடையதென அறிஞர்களால் போற்றப்படும் காவியம் சிலப்பதிகாரம் ஆகும். அந்தப் பெரு நூலில் வணிக நன்மக்கள் வரலாறு பேசப்படுகின்றது. அவ்வணிக மக்கள் காவிரிப் பூம்பட்டினத்தில் பெரு வாழ்வு வாழ்ந்த நிகழ்ச்சிகள் அந்த நூலில் விரிந்த நிலையில் விளக்கம் பெறுகின்றன். அந்தக் காவிரிப் பூம்பட்டினத்தில் இப்பர் கவிப்பர், பெருங்குடியர் என வணிக குலத்தினர் மூன்று பிரிவினர் பற்றி பேசப் படுகின்றது. இப்பர் என்பவர் ஆயிரக் கணக்கான செல்வத்தையும், கவிப்பர் என்பவர் இலட்சக் கணக்கான செல்வத்தையும், பெருங்குடியர் என்பவர் கோடிக்கணக்கான செல்வத்தையும் உடையவராக வாழ்ந்தனரென்று நாம் கருதலாம் இவர்களுள் உள்நாட்டு வாணிகஞ் செய்தவர்கள் மாடுகளின் மேல் தானியப்பொதிகளை ஏற்றிச் சென்று விற்றுப் பொருள் தேடி வந்தனர். அவர்களை அக்கால மக்கள், அந்நிலை காரணமாகச் சாத்து வாணிகர் என அழைத்தனர். பொதி மாடுகள் அதிகம் உடையவர்களாய், அதற்குத் தகுந்த ஆட்கள் பலரது துணை கொண்டு பெரு வியாபாரம் செய்தவர்கள் பெருஞ் சாத்து வாணிகர் என்றும், மாசாத்து வணிகர் என்றும் அழைக்கப் பெற்றனர். அக் காலத்தில் வணிக நன் மக்கள் நாயகர் என்றும் அழைக்கப் பெற்றனர். அவர்களுள் பெருஞ் செல்வராக வாழ்ந்தவர் மாநாயகர் என்ற பெருஞ் செல்வந்தர், அறங்கள் பல புரிந்து, ஊரார் போற்ற, அரசர்களும் மதிக்க வாழ்ந்தவர்களுக்கு அந்த நாளில் வாழ்ந்த பெரு மன்னர்கள் “எட்டி” என்ற சிறப்புப் பட்டங்களை வழங்கிப் போற்றுவர். அவர்களுக்கு அரசருக்குரிய விருதுகளும் பிற சிறப்புக்களும் உண்டு. இவ் வணிகர்கள் சூடும் அடையாளப் பூ “எட்டிப்பூ” எனப்படும். இவர்கள், மன்னர் போன்ற சிறப்புடன் அவர்களுக்கு அடுத்த மதிப்புடன் வாழ்ந்ததால் இவரை அக்கால மக்கள் இளங்கோக்கள் என்றும், மன்னர் பின்னோர் என்றும் அழைத்தனர். இவர்கள் வாணிகத்தின் பொருட்டு பல காளை மாடுகள், ஆவினங்களைப் பாதுகாத்து வந்தமையால் இவர்கள் “ஆண் காவலர்” எனவும் அழைக்கப் பெற்றனர்.
சிலப்பதிகாரக் காவியத் தலைவனான கோவலனின் தந்தை ஒரு மாசாத்துவாணிகன் என்பதையும், கோவலனுடைய மனைவி கண்ணகியை ஈன்றவன் ஒரு மாநாய்க்கன் என்பதையும் நாம் அறிந்துகொள்ளுதல் வேண்டும். இந்திரவிழாக் கொண்டாடத்தவறிய காரணத்தால், முன்னொரு சமயம் காவிரிப்பூம்பட்டிணத்தைக் கடல் விழுங்கி விட்டதென்பதை நாம் மணிமேகலை முதலிய காவியங்களால் அறிகிறோம். அக்காலத்தில் வாழ்ந்த வணிகர்கள் தமது நிலைகளையிழந்து அதே போன்ற வேறு பட்டிணங்களையும், நகரங்களையும் அடைந்து வாழ வேண்டி வந்தது. அவர்கள் அவ்வாறு எந்தெந்த நகரங்களுக்குச் சென்று வாழ்ந்தனர் என்பதை யாரும் அறிய இயலாது.
பிற்காலத்தில் எழுந்துள்ள பெரியபுராணத்தில் காரைக்கால் என்றதோர் கடற்கரை நகரமும், நாகையென்ற கடற்பட்டிணமும் சிறப்பாகப்பேசப் பெற்றன. அவைகளின் சிறப்பையும், அங்கு வாழ்ந்த வணிகர்களைப் பற்றியும் பெரிய புராணத்துள் “காரைக்கால் அம்மையார் சரிதம்” நன்கு பேசுகின்றது. சைவ சமயத்துறவியான பட்டினத்தடிகள் ஒரு வணிக மன்னர் ஆவர். “காதறுந்த ஊசியும் வராது காண் நுங்கடை வழிக்கே” என்று அவருக்கு உபதேசித்த மருதவாணரும் வணிக குலச்செம்மலே என்பதை யாவரும் அறிவர். கடல் கொள்ளப்பட்டுச் சென்ற வணிகர்களுலள் சிலர் தஞ்சை, உறையூர், திருச்சி, காஞ்சி முதலிய நகரங்களிலும், குடியேறி வாழ்ந்திருத்தல் கூடும். இங்கனம் பல இடங்களிலும் குடியேறி வாழ்ந்த நிலைமையை யாரும் இல்லையென மறுக்க இயலுமோ?. இவ்வண்ணம் குடியேறி வாழ்ந்த பழம் பெரும் வணிகர்கள் அக்காலத்துப் பேசிய மொழி செந்தமிழேயாகும். அவர்கள் பேணிய சமயமும் சைவமே என்பதை நாம் நம்பலாம். அந்நாளில் தமிழ் பேசி சைவம் பேணி வாழ்ந்த அவர்கள் குடிவழிச் செல்வர்களே, தமிழகத்தில் தற்பொழுது சைவம் பேணி வாழும் நாட்டுக் கோட்டைச் செட்டியார், நகபத்துசைவர், ஆயிரத்துவணிகர், ஐநூற்று வணிகர், பனிரெண்டார் என்று பேசப் பெறும் நமது பரம்பரை என்றால், அது சிறிதும் தவறாகாது, மிகையாகாது. இதுவே நமது பூர்வீக சரிதம்.
நல்ல தொடக்கம். வாழ்த்துக்கள்.
It is that extra in the ordinary that makes extraordinary. Congrats for all the PYA members who have contributed for this extraordinary venture. New look, new feel and innovation combined with enthusiasm are the mantras of the new team. Congrats and all the best to achieve greater heights.
Heartiest Congratulations to one and all associated in achieving Website open for our Panirendar Community.
By
R.Samiappan@Manickam
K.Vidya and S.Raja Siva Sree
Velur
If any of our members are interested in the following positions, please send an SMS to 9741012349
Req. ID POSITION
28422 HMI-Engg/Sr Engg
28423 HMI-P.E
28424 BT/WIFI- Engg/Sr Engg
28427 BT/WIFI- P.E
28562 VR
28629 Embedded – P.E
28630 Embedded- Engg/Sr Engg
28631 IOC – P.E
28632 IOC- Engg/Sr Engg
28627 Principal Engineer / Lead Engineer – Android Java,C++ Apps
28628 Engineer /Sr.Engineer – Java, C++,Android Apps
28583 Principal Engineer / Lead Engineer – Tuner
28581 Engineer /Sr.Engineer – Tuner
28564 Principal Engineer / Lead Engineer – Audio DSP
28563 Engineer /Sr.Engineer – Audio DSP
From our Whtsapp : posted by D Kumaresan எனது ஆருயிர் நண்பர்
மறைவிற்கு இரங்கற்பா!
ஆழ்கடலில் அமிழ்ந்து
முத்தெடுப்பார் மனிதர்கள்.
பூவுலகில் புகுந்து
முத்துகிருஷ்ணனை எடுத்தார்களோ தேவர்கள்?
இலையுதிர் காலத்தில்
இலையுதிரும் என்பார்கள்..
தலைவரே உதிர்ந்து விட்டீர் இதுவென்ன
தலையுதிர் காலமோ?
ஆர்ப்பரிக்கும் அலைகடலும் உன் குரல் கேட்டால் அமைதியாகும்.
யார் குரல் கேட்டு இன்று
நீர் அமைதியானீர்?
பொன்விழா நடத்தி நீர் செய்த சாதனை கண்ட எமதர்மன்
தன்விழா ஏதும் நடத்த
உம்மை அழைத்துச் சென்றானோ?
பார்ப்போரைப் பாசத்தால் பிணைக்கும் பாங்கு கண்டு காலதேவன் பாசத்தால்
உம்மைப் பிணைத்து விட்டானோ?
பிறர் வாழ வேண்டுமென்று
இரத்த தானம் செய்தாய் – இன்று யார் வாழ வேண்டுமென்று உயிர் தானம் செய்தாய்?
கேட்பதற்கு கோடி வினா இன்னும் இருந்தாலும் கேட்கவில்லை.
நீர் இல்லை என்று உலகே சொன்னாலும் என் மனம் ஏற்கவில்லை.
மறைந்து விட்டீர் என்று யார் சொன்னார்?
பனிரெண்டார் நெஞ்சங்களில் நீங்காமல் நிறைந்து விட்டீர் என்பதே மெய் !
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், நிற்கிறார்
விரும்பு
கருத்து This is posted here for an additional to our FB