ஐயர் மலை

கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து 8 ஆவது கிலோமீட்டர் தூரத்தில்
மணப்பாறை சாலையில் காவிரியின் தென்கரையில் அய்யர் மலையின் உச்சியில் அமைந்துள்ளது இரத்தினகிரீஸ்வரர் கோயில்.ayyarmalai1-150x150

ஏறத்தாழ 1200 அடி உயரத்தில் மலைகளையே அஸ்திவாரமாகக் கொண்டு அமையப்பெற்றுள்ள இந்த கோயில் 2 ஆம் குலோதுங்க சோழனால் கட்டப்பட்டுள்ளது.  இந்த கோயிலுக்கு இரதினகிரி, மாணிக்க மலை, சிவாய மலை, ஆராதனசலம் என்று வேறு பெயர்களும் உண்டு.  தற்போது மக்கள் வழக்கில் அய்யர்மலை என்று வழங்கபடுகிறது. அய்யர் மலைக்கு பல்வேறு காரணப்பெயர்கள் உள்ளன.

பஞ்சபாண்டவர்கள் வனவாசதின்போது ஆங்க்ஞணவாசம்  என்ற காலத்தில் மறைந்து வாழ்வதற்கு இந்த மலையை தேர்ந்து எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

மாணிக்கம் வேண்டி வந்த ஆரிய மன்னன் ஒருவனுக்கு இறைவன் தொட்டி ஒன்றை காட்டி காவிரி நீரால் நிரப்பச்சொன்னார். அது எப்படியும் நிரம்பாமல் இருக்கக் கண்டு கோபம் கொண்ட அரசன் உடைவாளை ஓச்ச, இறைவன் மாணிக்கத்தை தந்து அருளினார்.  மனம் திருந்திய அரசன் அதை விரும்பாது, சிவப்பணி செய்து முக்தி பெற்றான் என்பது வரலாறு.  இன்றும் சிவலிங்கத்தின் மேம்புறத்தில் வெட்டப்பட்ட வடுவைக் காணலாம்.

தினசரி இரதினகிரீஸ்வரருக்கு காவிரி தீர்ததால் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. ஆரிய மன்னரின் பரம்பரையை சேர்ந்தவர்கள் தினமும் காவிரிக்கு சென்று 2 குடங்களில் தண்ணீரை தலையில் சுமந்தபடி 8 கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து 1017 திருப்படிகளில் ஏறி 3 கால அபிஷேகம் செய்கின்றனர்.

தினமும் பகல் 12 மணி, 2 மணி, மாலை 5 மணி என 3 கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

கார்த்திகை மாதம் 5 சோம வாரங்களும் இந்த கோவிலீல் விசேஷம். சித்திரை மாதம் தேர்திருவிழா  நடை பெறுகிறது.  மாசி மாதம் சிவராத்திரி மிகச்சிறப்பாக இங்கே கொண்டாடப்பட்டு வருகிறது.

இங்கே ஒரு அதிசியம் தினசரி நிகழ்ந்து கொண்டிருக்கிறது.  சிவலிங்கத்துக்கு தினசரி பால் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பாலை கோமுகம் வழியாக பிடித்து ஒரு பாத்திரத்தில் வைத்து விடுகிறார்கள். மறுநாள் காலை அது தயிராக மாறி வருகிறது .

ஐயர் மலை 1923 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் அழைப்பிதழ்      ayyar malai kumbabhishekam 1923

 

பனிரெண்டார் உருவான வரலாறு:

 

ஒரு காலத்தில் செட்டியார்கள் 11 பேர் வியாபாரம் செய்து விட்டு அய்யர்மலையின்  அடிவாரத்தில் அமர்ந்து தங்களது வியாபாரத்தில் கிடைத்த லாபங்களை 11 பங்காக பிரிதனர். ஆனால் பங்குத்தொகை 12 ஆக பிரிந்தது. மீதம் உள்ள பந்துத்தொகையை என்ன செய்வது என்று வணிகர்கள் யோசித்துக் கொண்டிருந்தபோது அவர்கள் முன்பு இறைவன் தோன்றி நானும் உங்களில் ஒருவனதான். 12ஆவது பங்கை தனக்கே தரவேண்டும் என்று கேட்டார்.

இவ்வாறு 12 ஆவது பங்கை 11 செட்டியார்களும் இறைவனுக்கு அளித்து வணங்கினார்கள்.  இன்றைக்கு கோவிலில் நடைபெறும் 3 கால பூஜைகளில் ஒரு கால பூஜை செட்டியார்களின் சார்பில் அவர்களது தொழிலில் இருந்து லாபத்தின் ஒரு பங்கை கொண்டு நடத்துகின்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *